புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பொதுவாகவே முகூர்த்த தினங்களில் அவருக்கு வரும் அனைத்து அழைப்பிதழ்களையும் தவிர்க்காமல் நேரம் காலம் பார்க்காமல் முகூர்த்த நாளன்றே கலந்து கொள்வார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பல்வேறு கழக நிர்வாகிகளின் இல்ல விழாக்களில் கலந்து கொண்டு ஆலங்குடியில் நடைபெறும் திருமணத்திற்கு செல்லும் வழியில் புதுக்கோட்டை குருக்களையாப்பட்டி அருகே மதியநல்லுரை சேர்ந்த மாரிமுத்து– ரவி பிரியா மணமக்கள் இருவரும் வடசேரிப்பட்டி அங்காளம்மன் கோவிலில் திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்சிக்காக மணமகன் இல்லமான மதியநல்லூர் செல்லும் வழியில் குருக்களையாபட்டி என்ற இடத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்களின் காரை கண்டவுடன் அவர்கள் சென்ற வாகனத்திலிருந்து குதித்து அந்த வழியில் சென்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரிடம் ஆசிர்வாதம் பெற்றனர். பிறகு குடும்பத்தினருடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் அனைவரையும் அந்த ஆட்டோவில் ஏற்றி வழி அனுப்பி வைத்தார், தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.