மதுரையில்இன்று மாலையில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
இன்று மாலை மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானம் திடீர் என மலை 4 மணியளவில் பலத்த காற்று வீசியதுடன் அவனியாபுபுரம். பெருங்குடி. சிந்தாமணி, சாம நாத்தம், திருப்பறங்குன்றம் மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை சுமார்1/2 மணிநேரம் மழை விடாமல் பெய்தது.

இதனால் அவனியாபுரம்100-வது வார்டில் ராமசாமி கோன் கிணற்று தெருவில் உள்ள கால்வாய்களில் தூர்வாரப்படாமல் குப்பைகள் தேங்கியதில் கால்வாய்க்கால் அடைப்பு ஏற்ப்பட்டது.
தெருக்களில் சாக்கடை சுத்தம் செய்யாததால் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தேங்கிய மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தத வீடுகளுக்குள் புகுந்தது.
கழிவு நீரை வீட்டில் உள்ளவர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இனிவரும் மழை காலங்களில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் கால்வாய் தூர்வாரி சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)