புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாள் விழா வரும் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இன்று காரைக்கால் வந்திருந்த அமைச்சரை வரவேற்ற அவரது ஆதரவாளர்கள் அவரது பிறந்த நாளை இன்று கொண்டாடும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
காரைக்கால் அன்பு நகரில் முன்னாள் மாவட்ட ஓபிசி அணி தலைவர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கலந்து கொண்டு தனது உடலை பரிசோதனை செய்து கொண்டார். தொடர்ந்து ஏழை ஏளிய மக்களுக்கு தையல் இயந்திரம், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக பாஜக கொடியினை ஏற்றி வைத்து அமைச்சர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில் மீனாட்சி சுந்தரம், உழவர்கரை சரவணன், மதன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் பால குமரன், சுரேஷ் கண்ணா உள்ளிட்ட ஏராளமான பா.ஜகவினர் கலந்து கொண்டனர்.