மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாக கூறுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது குறுக்கு நெருக்கமாக தெரு நாய்கள் ஓடுவதால் வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகவும் பெண்கள் குழந்தைகளை கடைகளுக்கு அழைத்துச் செல்லும்போது பின்னால் தெரு நாய்கள் விரட்டிச் செல்வதும் குழந்தைகளை மிரட்டுவதுமாக இருப்பதால் பெண்கள் குழந்தைகள் ஒரு வித பயத்துடன் உள்ளதாக கூறுகின்றனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திலும் ஊராட்சி செயலாளரிடமும் பலமுறை புகார் அளித்தும் தெரு நாய்களை அப்புறப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர் வாடிப்பட்டி யூனியன் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலையிட்டு தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ரேபிஸ் நோய் கடியில் இருந்து பொதுமக்கள் மற்றும் பெண்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விட்டுள்ளனர்.