விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்தாண்டியாபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 50 ) கட்டிட தொழிலாளி. கட்டிடப் பணிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தனது உறவினர் மாரி கண்ணனை (வயது 45 ) அழைத்துக் கொண்டு முத்தாண்டியாபுரத்தில் இருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது செல்லும் போது வளைவில் எதிர்பாராதவிதமாக திரும்பிய போது ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. அதில் எதிர்பாராத விதமாக மகாலிங்கம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடன் வந்த மாரிகண்ணன் காயங்களுடன் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மகாலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . விபத்து குறித்து மகாலிங்கத்தின் மனைவி செல்வி (வயது40) ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.