ஜூனியர் சேம்பர் நேஷனல் என்னும் உலகளாவிய இளையோர் அமைப்பின் இந்திய தேசிய தலைவர் JFM அங்கூர் ஜுன் ஜுன் வாலா அவர்களுடைய அதிகாரப்பூர்வ வருகை இன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.

இந்த விழாவினை புதுக்கோட்டையில் உள்ள ஒன்பதுக்கும் மேற்பட்ட கிளை அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தது இந்த இயக்கத்தின் நோக்கங்கள் இளையர்களை நல்வழிப்படுத்தி நல்ல தலைவர்களாக உருவாக்குவதே இதனுடைய நோக்கம் இதற்கு கிட்டத்தட்ட 120 நாடுகளில் கிளைகள் உள்ளது இந்த அமைப்பு தொடங்கி 110 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதில் தனி மனித மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சிகள் வழங்கி ஒரு அமைதியான உலகத்தை ஏற்படுத்துவதை இதனுடைய நோக்கமாகும் 18 லிருந்து 40 வயதில் உள்ள இளைஞர்கள் இதில் உறுப்பினராக இருந்து மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள் இதனுடைய தேசிய தலைவர் அவர்கள் இரண்டு நாட்களாக மண்டலம் 23 திருச்சி தஞ்சாவூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து இன்று புதுக்கோட்டையில் நிறைவு செய்துள்ளார்கள்.
இந்த நிகழ்வில் புதுக்கோட்டை சங்கமம் கிளை இயக்கத்தில் இருந்து ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதாக திட்டம் தேசியத் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். மற்றும் காபில் என்ற தேசியத் தலைவர் அதிகாரப்பூர்வ திட்டத்தினை புதுக்கடை சங்கமம் கிளை இயக்கம் தொடங்கி 35 மகளிருக்கு தையல் கலை பயிற்சி கொடுத்து இலவசமாக கொடுத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள் தேசிய இந்தியாவுடைய நிறைவு திட்டமான தேசிய வார விழா செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு புதுக்கோட்டை சங்கமத்திலிருந்தும் மற்ற கிள இயக்கங்கள் இருந்தும் திட்டங்களை வெளியிட்டார்கள். அதேபோல இளைஞர்களுக்கு புதுக்கோட்டையில் இருந்து SLOT என்ற ஒரு பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து தேசித் தலைவர் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் மண்டல தலைவர் JCI PPP அசோக் ராஜ் பல்வேறு கிளை இயக்க தலைவர்களும் உறுப்பினர்களும் முன்னாள் நிர்வாகிகளும் புதுக்கோட்டை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.













; ?>)
; ?>)
; ?>)