திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் காளி, நாட்டு மாடுகளை வாங்கி தனது தோட்டத்தில் வளர்த்து வந்தார். கடந்த இரு நாட்களாக அவரைக் காணவில்லை என அவரது உறவினர்கள் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமர் எனும் இளைஞர், காளியை கொலை செய்து புதைத்துவிட்டதாக காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

ராமரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காளி மாடு வாங்குவதற்காக ராமரிடம் 3 லட்சத்திற்கு மேல் பணம் கொடுத்திருந்தார். ஆனால், ராமர் மாடுகளை வாங்கித் தராததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று, காளியின் தோட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த ராமர், காளியை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்து, உடலை அருகிலுள்ள பள்ளத்தில் தள்ளி மண்ணால் மூடி புதைத்துவிட்டு தப்பிச் சென்றதாக வாக்குமூலம் அளித்தார்.

ராமர் அடையாளம் காட்டிய இடத்தில், ஆத்தூர் வட்டாட்சியர் முன்னிலையில் காளியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பண பரிவர்த்தனை தகராறில் மாட்டு வியாபாரி கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது.













; ?>)
; ?>)
; ?>)