மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர்யில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு தினசரி மாணவ மாணவிகள் பள்ளி வாகனம் மூலம் அழைத்து வருவது வழக்கம்.,

இன்று காலை பள்ளிக்கு மாணவ மாணவிகளை ஏற்றி வந்த பள்ளி வாகனம் பள்ளி முன்பு நெடுஞ்சாலையிலிருந்து வளாகத்திற்குள் சொல்ல திரும்பிய போது மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.,
இதில் நிலை தடுமாறி பள்ளி வாசலில் நின்றிருந்த செக்கூரிட்டி திருவேங்கடசாமி மீது மோதியதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.,
மேலும் பள்ளி வாகனத்தில் வந்த ஆயா அம்மா முத்துலட்சுமி உள்பட 10 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறுசிறு காயம் ஏற்பட்ட நிலையில் 108 ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.,

இந்த விபத்து தொடர்பாக உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த திருவெங்கடசாமி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
பள்ளி மாணவ மாணவிகள் வந்த வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,