• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் மதுரையில்..,

ByKalamegam Viswanathan

Sep 3, 2025

மதுரை மாநகராட்சிக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் நாளைய தமிழக முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தாக மேலமாசி சந்திப்பில் T.M. கோர்ட் பகுதியிலும் அடுத்து படியாக மதுரை ஓபுலா படித்துறை பகுதியிலும் எழுச்சி பயண சிறப்புரையாற்றுகிறார்.

எழுச்சி பயணத்தில் முன்னாள் அமைச்சர்கள் R.B உதயகுமார் செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் V.V.ராஜன் செல்லப்பா முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் எழுச்சிப் பயணம் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டனி கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

அதிமுக முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். மதுரை மேற்கு தொகுதி பழங்காநத்தம் மக்கள் ஆரவார எழுச்சி பயணம் வெற்றி பெறுவார் தொடர் வெற்றி பெறுவார்.

மதுரை மாவட்டம் அதிமுகாவின் கோட்டை சூழ்ச்சி செய்து சில தொகுதிகளை திமுக வெற்றி பெற்றது. 2026 ல் அனைத்து தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். 2026ல திமுக வெற்றி பெறும் என்று ஸ்டாலில் பகல் கனவு காண்கிறார்.

இன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இன்று தொலைகாட்சி பத்திரிகையில் இது தான் செய்தி தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், போதை பொருள் விற்பனை. திமுக ஆட்சியின் கஞ்சா விற்பனை அம்மேகமாக நடை பெறுகிறது

இந்த போதை பொருள்களினால் மாணவர்கள் அதிகம் பாதிக்க படுகிறார்கள்

நம் குழந்தை கள் நம் கண்முன்னே அழிவதை காண்கின்றோம் திமுக ஆட்சியில் 1. ஆண்டில் விற்பனை துவங்கியது எதிர் கட்சியாக போதை விற்பனை தடுக்க சட்டமன்றத்தில் கூறினோம். ஆனால் இன்று அதிக அளவில் போதை பொருள் புலக்கத்தில் வந்து விட்டது. ஒரு மொம்மை ஆட்சி நடக்கிறது.

மதுரையில் மாநகராட்சியில் ஊழலில் திமுக ஆட்சியோ கண்டு பிடித்து திமுக மண்டல தலைவர்கள் ராஜினா செய்து இருக்கிறார்கள்.

மதுரையில் 200 கோடி உழல் நடைபெற்று உள்ளது இதற்கு ஆணையர் அதிகாரிகள் கைது செய்ய வேண்டும்

மதுரை மேயரை விட்டு விட்டு அருடைய கணவரை கைது செய்வது சரியில்லை அதற்கு பொறுப்பு அதிகாரிகள் 200 கோடி ஊழல் திமுக அரசு பெறுப்பு ஏற்க்க வேண்டும்.

மேலும் 250 கோடி கடன் பெறுவது பெறும் ஊழல் இந்த அரசாங்கம் செய்யும் தவறுக்கு இந் மாநகராட்சியே சாட்சி. இங்கு ஊழல் பங்கு பிரிப்பதில் பிரச்சனை சண்டை இந்த அரசு ஊழல் அரசுக்கு மதுரை மாநாகராட்சியே சாட்சி.

எடப்பாடி பழனிச்சாமி பேசி கொண்டு இருக்கும் போது வழக்கம் போல் ஆம்புலன்ஸ் வருகை 5 நிமிடம் கூட்டத்தில் சென்றது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு தொழில் பரிந்துணர்வு ஒப்பந்தம் சென்றது மக்களை ஏமாற்றி முதல் அமைச்சர் பெய்யான செய்திகள் வெளியிடுகிறார்.

வெளிநாடுகளில் ஒரு தொழில் புரிந்தனர் வு ஒப்பந்தம் போடப்பட்டால் குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும்

ஒரு தொழில் நடத்துவதற்கான ஸ்டாலின் புரிந்துணர்வு போட்ட உடனே அந்த தொழில் நடத்துவதாக பொய்யான அறிக்கைகளை விடுகிறார் ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டுமான பொருட்களின் விலை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்படும் என்று கூறினார்கள் கட்டுமான பொருட்களின் விலை கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கணும் என்று சொன்னால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

அதிமுக ஆட்சியில் M. சாண்ட் 3000 ரூபாய் விற்கப்பட்டது தற்பொழுது திமுக ஆட்சியில் 5500 விற்கபடுகிறது. 3000 ரூபாய் அதிகமாக விற்கப்பட்டுள்ளது இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்று வீடு கட்டும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் ஒருத்தன் கம்பி 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது தற்பொழுது திமுக ஆட்சியில் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது எதைப் பற்றியும் கவலைப்படாத முதலமைச்சர் ஸ்டாலின் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்

மதுரை நூறு வார்டு பகுதிகளுக்கும் 1300 கோடி நிதி அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டு குடிநீர் சேவைகளுக்கு அனைத்திற்கும் காவிரி குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டபட்டத அனைத்தையும் கொண்டு வந்தது அதிமுக திட்டம் அந்தத் திட்டத்தை வேண்டும் என்று முடக்கி உள்ளது திமுக அரசு முடக்கி உள்ளது அதை ஆமை வேகத்தில் செயல்படுத்துகிறது.

மீண்டும் அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் விரையில் செயல்படுத்தபடும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தீபாவளிக்கு அனைத்து பெண்களுக்கும் இலவசமாக ஒவ்வொரு தீபாவளிக்கும் சேலை வழங்கப்படும் என்று கூறினார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மணமகளுக்கு மணமகனுக்கும் பட்டு சேலை பட்டு வேஷ்டி வழங்கப்படும்.