• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகை.,

Byரீகன்

Sep 2, 2025

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். நாளை சென்னை வரும் அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்கிறார் அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.

நாளை மறுநாள் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகிறார். திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் செல்கிறார். திருவாரூர் மாவட்டம் நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி உரை நிகழ்த்துகிறார். அதனை தொடர்ந்து திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் செல்கிறார். அங்கு உள்ள ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

ஸ்ரீரங்கம் வருவதை ஒட்டி ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இன்று ஹெலிகாபோர்ட் இறங்கு சோதனை நடைபெற்றது.

மேலும் ஶ்ரீரங்கம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஸ்ரீரங்கம் முழுவதும் போலீசார்கள் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.