கரூர் மாநகர் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 50 ஆண்டு காலமாக ஆட்டோ தொழில் செய்து வருகின்றனர். இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் சட்டவிரோதமாக அனுமதி பெறாமல் ஓன் போர்டு இருசக்கர வாகனத்தில் வாடகை பயணம் ரேப்பிடோ பைக் ஓட்டி வருகின்றனர்.
இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

மேலும் ஷேர் ஆட்டோக்கள் வைரக்கப்பட்ட தூரத்தை விட 10 கிலோ மீட்டர் கூடுதலாக பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதிக்கப்படுகின்றனர்.

மினி பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லாமல் வேண்டுமென்று ஆட்டோ நிறுத்தி உள்ள இடத்தில் 20 நிமிடம் தாமதமாக பொது மக்களை ஏற்றிய பின்னர் செல்கின்றனர் இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், ஆட்டோக்கள் நிறுத்தும் இடத்தில் கால் டாக்ஸி வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலும் அதிகளவு பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி நாளை மாவட்ட ஆட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்க உள்ளதாக கூறினர்.













; ?>)
; ?>)
; ?>)