வலையங்குளம் பகுதியில் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன்.அஜய்குமார் ( வயது 26) என்ற வாலிபரை ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அஜய்குமார் இதே பகுதியில் டிரம்ஸ் (மே ளம்) அடிக்கும்வேலை செய்து வருகிறார் இந்நிலையில் இன்று வளையங்குளம் மெயின் ரோட்டில் எஸ் எம் பி மஹால் எனும் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பும்போது இரண்டு பைக்குகளில் வந்த மர்மகும்பல் தாக்கியதில் அஜய் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பெருங்குடி போலீசார் அசோக்குமார் உடலை கைப்பற்றிய உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொண்டு சென்றனர்.
மேலும் அஜய்குமார் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.