விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இயற்கை விவசாயம் தொடர்பான பட்டறிவு பயணம் ஏழாயிரம்பண்ணை அருகே இ.ராமநாதபுரம் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். .

இதில் கல்லமநாயக்கர்பட்டி தனியார் கல்லூரி மாணவர்கள், மேலதாயில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்தும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த பட்டறிவு பயணத்தில் மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை மற்றும் அங்கக பண்ணையம் தொடர்பாக செயல் விளக்கம் மற்றும் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள இயற்கை பண்ணையத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு இயற்கை வேளாண்மை மற்றும் பண்ணையம் தொடர்பாக நிர்வாகி பொன்னுச்சாமி பயிற்சி மற்றும் செயல் விளக்கங்கள் செய்து காண்பித்தார்.

வெம்பக்கோட்டை வட்டாரத்தின் வேளாண்மை உதவி இயக்குனர் முத்தையா, வேளாண்மை அலுவலர் அன்னபூரணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வெம்பக்கோட்டை வட்டார விரிவாக்க சீரமைப்பு திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்