மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னராஜ கணபதி திருக்கோவில் கடந்த மாதம் 13-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது தொடர்ந்து 47 நாட்கள் தினசரி பூஜைகளும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று 48வது நாள் மண்டல பூஜை முன்னிட்டு சிறப்பு ஹோமம் உள்ளிட்ட அபிஷேகங்கள் காலையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் செல்வி லோகிதா அவர்களது பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் திரளானோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை கண்டுகளித்து சிறப்பித்தனர். பின்னர் சிறப்பாக பரதநாட்டியம் ஆடிய செல்வி லோகிதாவிற்கு அப்பகுதி மக்கள் பொன்னாடை போற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
