கடந்த 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நாடெங்கும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது

அவனியாபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு அவனியாபுரம் வள்ளானந்தபுரம், கணக்கு பிள்ளை தெரு, கணபதி நகர், பிரசன்ன காலனி உள்ளிட்ட பகுதியில் சுமார் 24 சிலைகள் வைக்கப்பட்டன.
இதில் மூன்று சிலைகள் அவனியாபுரம் பகுதியில் இருந்து மதுரை நகர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது .ஒரு சிலை அவனியாபுரம் காவல் நிலையம் அருகே உள்ள நல்லதங்காள் ஊரணியில் கரைக்கப்பட்டது. மீதமுள்ள 20 சிலைகள் இன்று மாலை 6 மணி அளவில் ஊர்வலமாக புறப்பட்டு அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி கண்மாயில் கரைக்கப்பட்டது.

இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் ரிசர்சனம் நிகழ்ச்சிக்கு அவனியாபுரம் இந்து முன்னணி நகர தலைவர் மாரீஸ்வரன் மற்றும் முன்னாள் தலைவர் முர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். விநாயகர் ஊர்வலத்தை பாஜக மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் சடாச்சரம் துவக்கி வைத்தார். பாஜக மண்டல் தலைவர் கதிரேசன் செயலாளர் முத்துக்குமார் ,சுந்தர் உள்ளிட்ட சுமார் 200 தொண்டர்கள் கலந்து கொண்டனர்.