• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தனியார் உணவகத்தில் 2லட்சம் கொள்ளை!!

ByKalamegam Viswanathan

Aug 28, 2025

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில் அமைந்துள்ளது டெம்பிள் சிட்டி தனியார் உணவகம் பிரபலமான இந்த உணவகத்தில் நேற்று இரவு விற்பனையான பணத்தை உணவகத்தின் கல்லாப்பெட்டியில் வைத்துவிட்டு ஊழியர்கள் இரவு உணவகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் உணவகத்தை திறந்த போது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்ததில் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூபாய் 2 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்த நிலையில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு உணவகம் மற்றும் அருகில் இருந்த இடங்களில் மோப்பநாய் உதவியுடன் கொள்ளையர்களை தேடினர்.

இந்த நிலையில் உணவகத்தின் பின்புறம் உள்ள வயல் வெளிகளில் புகுந்த மர்ம நபர்கள் கல்லாப்பெட்டியை உடைத்து உள்ளே வைத்திருந்த சுமார் 2 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வாடிப்பட்டி பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.