புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அதிமுக கிளை செயலாளர் திருமண விழா நிகழ்ச்சிக்கு சென்று வரும்பொழுது கந்தர்வகோட்டை அடுத்த வளவம்பட்டி என்ற கிராமத்தில் பள்ளியில் படித்து வரும் சிறுவர்கள் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் அனைத்து சிறுவர்களும் சேர்ந்து விநாயகரை வழிபாடு செய்யும் நோக்கத்திலும் ஆர்வத்திலும் விநாயகர் சிலையை ஒன்று செய்து அப்பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களிடமும் ஒரு பழைய வாட்டர் கேனை உண்டியலாக மாற்றி பொதுமக்களிடம் தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

வரும்பொழுது அருகாமையில் அவ்வழியாக வந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் குழந்தைகளை ஊக்குவிக்கும் தருணத்தில் அவர்களிடம் பேசி நீங்கள் சிலை செய்வதற்கு எவ்வளவு செலவு ஆனது என்னிடம் எவ்வளவு தொகை கேட்கிறீர்கள் என்று கேட்டு பின்பு சிறுவர்களின் கோரிக்கையான ஒரு சிறுவன் 500 ரூபாய் கேட்டவுடன் உடனடியாக பணத்தினை கொடுத்தவுடன் உற்சாகத்துடன் மகிழ்ச்சி அடைந்த சிறுவர்களின் சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சி அடைய செய்தது இச்சம்பவம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.!