• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கன மழைக்கு வாய்ப்பு..,

BySeenu

Aug 28, 2025

கோவை மாவட்டத்தில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 22 ம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட கோவை குற்றாலம் தற்பொழுது மீண்டும் கன மழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இடம் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக இன்று மூடப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கருத்தில் கொண்டு வனத்துறைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாற வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு சீரான பின்னர் சுற்றுலா பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.