புதுக்கோட்டை அன்னம்மாள் புரம் ஸ்ரீ நகரில் 13 லட்சம் மதிப்பீட்டின் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நிகழ்வு பங்கேற்று கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டு பூமி பூஜை நிகழ்வு பங்கேற்றார்.

தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பெண்களிடம் உரையாற்றிய எம் எல் ஏ முத்துராஜா மாநகராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிகள் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது என தெரிவித்தார். இதை கேட்ட கிராம பெண்கள் கைதட்டி தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தனர் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் மேயர் திலகவதி செந்தில் ஊராட்சி மன்ற பொறுப்பாளர்கள் திமுகவினர் பங்கேற்றனர்