விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி மற்றும் கூடைப்பந்து அகடமி இணைந்து மாநில அளவிலான கல்லூரியில் கடை ஆண்கள் பெண்கள் பிரிவுகளில் கூடைப்பந்து போட்டி காளீஸ்வரி கல்லூரி மைதானத்தில் தொடங்கியது
சென்னை கோவை திண்டுக்கல் திருச்சி மற்றும் மாநிலத்தில் தலை சிறந்த அணிகள் போட்டியில் போட்டியில் கலந்து கொள்கின்றன. ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி இணைச் செயலாளர் காளீஸ்வரி குடும்பத்தின் நிர்வாகியுமான ராஜேஷ் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
முதல் பட்டியில் கோவை ஈஸ்வர் பொறியியல் கல்லூரியும் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியும் மோதின அதில் 55 -39புள்ளி கணக்கில் ஈஸ்வர் பொறியியல் கல்லூரி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் திண்டுக்கல் GTN அணி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியை 42.30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டிக்கான ஏற்பாடுகளை காளீஸ்வரி கல்லூரி நிர்வாகமும் அகாடமி நிர்வாகிகளும் சிறப்பாக செய்துள்ளனர்.