விருதுநரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக துவங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சிதலைவர் சுகபுத்ரா தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் நிதி, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களில் செயல்பட்டு வரும் நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து விருதுநகர் மண்டலத்தில் தற்போது 457 பேருந்துகள் வரை இயக்கப்படுகிறது.
இதனையடுத்து தற்போது 9 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது.

இராஜபாளையம் -மதுரை – செங்கோட்டை வழித்தடத்திலும், இராஜபாளையம் – செங்கோட்டை -பழனி வழித்தடத்திலும், அருப்புக்கோட்டை – பழனி வழித்தடத்திலும்,
சிவகாசி – மதுரை – திருச்சி வழித்தடத்திலும், இராஜபாளையம் – மதுரை -திருச்சி வழித்தடத்திலும், சிவகாசி – மதுரை -திருச்சி வழித்தடத்திலும், அருப்புக்கோட்டை -மதுரை -திருச்சி வழித்தடத்திலும்,
கோவில்பட்டி- மதுரை -திருச்சி வழித்தடத்திலும், இராஜபாளையம் -மதுரை -திருச்சி
வழித்தடத்திலும் ஆகிய 9 வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளின் சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மண்டல பொது மேலாளர்,உதவி இயக்குநர், உதவி மேலாளர்கள் போக்குவரத்துக்கழக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.