தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் “முதல் படை வீடு ” என்ற பெருமைகொண்ட திருத்தலமாக
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
அமைந்து உள்ளது.
இந்தத் தலத்தில் மட்டும்தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் தெய்வானை அம்பாளுடன் திருமணம் கோலத்தில் சாந்தமாக காட்சியளிக்கிறார். ஆகவேதான் இந்த தலத்தில் திருமணம் செய்ய பக்தர்கள் விரும்புகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகத்தின் கீழ் வள்ளிதேவஸ்தானம் திருமண மண்டபங்கள் உள்ளன இது தவிர திருப்பரங்குன்றம் நகருக்குள் 85 க்கு மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளது முகூர்த்த காலங்களில் திருவிழா போலதிருமண கூட்டம் அலைமோதும்
கோவிலுக்குள் ஒரு சில முகூர்த்த நாட்களில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது உண்டு.

கோவிலிலும் சரி திருமண மண்டபங்களிலும் சரி குறைந்தபட்சம் 3 மாதத்திற்கு முன்பே முன் பதிவு செய்து விடுவார்கள்,கோவிலில் திருமணம் நடைபெறுவதால் கோவிலுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும். இதேசமயம் இந்தக் கோவிலுக்குள் திருமணம் செய்தால் சகல பாக்கியம் அமையும் ஆகவே பெரும்பாலானோர் திருமண முன்பதிவு செய்வதில் போட்டோ போட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆவணி மாதத்தில வளர்ப்பிறை முகூர்த்தமாக நாளை 27-ந் தேதி (புதன்கிழமை) நாளை மறுநாள் 28-ந் தேதி (வியாழக்கிழமை) மற்றும் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் தொடர் முகூர்த்த தினமாக அமைந்து உள்ளது.வழக்கம்போல திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முகூர்த்த நாளில் திருமணம் செய்வதற்கு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் 3 நாட்களிலும் திருமணம் செய்வதற்காக 225 முன்பதிவு செய்துள்ளனர். இதில் 27-ந் தேதி விநாயகர் சதுர்த்தி, 28-ந் தேதி மண்டலாபிஷேகத்தின் நிறைவு விழா நடக்கிறது. ஆகவே திருவிழாவும் திருமணமும், ஒரே நாளில் வருவதால்பக்தர்கள் கூட்டமும், திருமண ஜோடிகளின் கூட்டமும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.