தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரதாப் என்பவர் கடந்த 20 ஆம் தேதி அதே ஊரை சேர்ந்த ரெங்கலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்,
பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரணையின் போது காதலித்து திருமணம் செய்த ரெங்கலட்சுமி அவரது தாயாருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த 23 வயதான புது மாப்பிள்ளை பிரதாப் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத அறைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த ராஜதானி காவல் துறையினர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை. காதல் திருமணம் முடித்து சில தினங்களே ஆன புது மாப்பிள்ளை
காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








