மதுரையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாடு இதில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் கோவை ஆர் எஸ் புறத்தை சேர்ந்த ஸ்ரீதர் வயது 28 இவரும் அவரது நண்பரும் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்று உள்ளார்கள்.

அப்பொழுது ஸ்ரீதரின் பையை போலீசார் சோதனை செய்த பொழுது பைகளில் மது பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் போலீசார் ஸ்ரீதரை கைது செய்து விசாரணை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.