மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வார்டு. எண் 84 ல் “உங்களுடன் ஸ்டாலின் ” திட்டத்தின் சிறப்பு முகாம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது.

விழாவில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , துணை மேயர் நாகராஜன் , காவல் உதவி ஆணையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல் துறை, மதுரை மாநகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, சத்துணவு, மின்வாரியம், ஆதார் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் மகளிருக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விணப்பங்கள் வழங்கப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 84 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் போஸ் முத்தையா வட்ட செயலாளர் பாலா உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
