விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் திரைப்பட நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை சூழ்ந்த ரசிகர்கள் அவரிடம் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் தூத்துக்குடி ஹார்பர் பகுதியில் திரைப்பட படப்பிடிப்பிற்கு வந்ததாகவும் இடைவெளி நேரத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அருகிலேயே தான் தவெக மதுரை மாநாடு நடக்கிறது அதில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏதும் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.