108 ஆம்புலன்ஸ் தொமுச இன்று எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் மனு மதுரை SP அவர்களிடம் வழங்கப்பட்டது
பொருள்:- தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும் 108 தொழிலாளர்கள் சார்பாகவும் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் வழங்கப்பட்டது.

ஐயா வணக்கம். மருத்துவத்துறை உன்னதமான சேவையில் இரவு பகல் பாராது மக்கள் சேவை செய்து வரும் 108 உழியரை கடந்த 18.08.2025 அன்று வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவசர கேஷாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்திரர் அவர்கள் நோயாளியை ஏற்றுவதற்காக வண்டியை அதன் வழியாக இயக்கி உள்ளார்.

மேற்படி ஓட்டுநர் சுரேந்திரர் அவர்கள் மாலை 9.45 மணிக்கு அவரது ஆம்புலன்ஸ் அலைபேசிக்கு சென்னை 108 கால் சென்டரிலிருந்து அவசர அழைப்பு வந்தது. அணைக்கட்டு location-லிருந்து 60 வயதான சந்திரா என்ற நோயாளி வயிற்றுப்போக்கின் காரணமாக அடுக்கம்பாறை ஆரம்ப சுகாதார மருத்துவமனையிலிருந்து உயர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக கிடைக்கப்பெற்ற தகவலை ஏற்று 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்திரர் மற்றும் EMT மருத்துவ உதவியாளர் அவர்களுடன் செல்லும் சமயத்தில் ஆம்புலன்ஸானது எதிர்கட்சித்தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த இடத்தில் கூட்ட நெரிசலில் மாட்டிக்கொண்டது.
அந்த சமயத்தில் ஆம்புலன்ஸை பார்த்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆம்புலன்ஸ் டிரைவரை பார்த்து ஆள் இல்லாமல் ஏன் ஆம்புலன்ஸை கொண்டு வந்தாய் எனவும், இனி கூட்டத்திற்குள் ஆம்புன்ஸ் வந்தால் “ஓட்டிட்டு வருகிற டிரைவரே அதில் patient-ஆக போகிற நிலைமை வரும்” என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அச்சுறுத்தும் விதமாக மிரட்டல் விடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் சொன்னவுடன் அங்குகூடியிருந்த மக்கள் அனைவரும் ஆம்புலன்ஸை அவர்களது கையால் அச்சுறுத்தும் வண்ணம் அடித்தனர்.
மேலும் ஆம்புலன்ஸ் டிரைவரின் ID கார்டு, சட்டை முதலியவற்றை இழுத்து ஆம்புலன்ஸ் வண்டியில் வரக்கூடிய அலைபேசி போனையும் கூட்டத்தில் உள்ளவர்கள் பறிக்க முயன்றனர். மருத்துவ சேவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களான நாங்கள் மக்களுக்காக உன்னதமான இரவு பகல் பார்க்காமல் உதவிவரும் எங்களுக்கு எதிர்கட்சித்தலைவரின் இத்தகைய செயல் அனைத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், மருத்துவ உதவியாளருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்படி எதிர்கட்சித்தலைவரின் மேற்படி செயலால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
ஆகவே ஐயா அவர்கள் கடந்த 18.08.2025 அன்று 108 ஆம்புலன்சில் நோயாளிகளை ஏற்றுவதற்காக வந்த டிரைவர் சுரேந்திரன் அவர்களை அச்சுறுத்தி மிரட்டல் விடுத்ததோடு, அவரது சட்டையை பிடித்து இழுத்து ID கார்டு, ஆம்புலன்ஸில் உள்ள எமர்ஜென்சி செல்போன் ஆகியவற்றை பறிக்க முயன்ற நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டபடி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சார்பாக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொது மேடையிலே 108 ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும்.