மதுரை பாரப்பத்தியில் தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநில மாநாடு பணிகள் முடிந்து மின்னொளியில் மாநாடு திடல் காட்சியளிக்கிறது அருகில் உள்ள பொதுமக்கள் ஏராளமான பேர் வந்து மாநாடு திருடர்களை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது.
பாரப்பத்தி அருகே சுமார் 540 ஏக்கர் பரப்பளவில் மாநாடு திடல் அமைக்கப்பட்டு கடந்த மாதம் 17ஆம் தேதி பூமி பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 13 நாட்களாக மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மாநாட்டின் இறுதி கட்ட வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது மாநாட்டில் அமைக்கப்பட்ட மின்னொளியில் மாநாட்டு மேடை தயாராக காட்சியளிக்கிறது.
ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து மாநாடு திடலை பார்வையிட்டு வருகின்றனர்.மேலும் மாநாடு திடலில் நின்று போட்டோ எடுத்து செல்கின்றனர்.

200 அடி நீளம் 60 அடி அகலம் கொண்ட விழா மேடை முற்றிலுமாக தயார் செய்யப்பட்டு பணிகள் முடிவு பெற்றது அதேபோல் வெற்றி பேரணியில் தமிழ்நாடு மற்றும் உங்கள் விஜய் வருகிறேன் என்ற விளம்பர பதாய்கள் தற்போது ரெடியாகி வருகின்றது.
இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபடும் வேலைகளை தமிழக வெற்றிக்கழக பொதுச்சாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா பார்வையிட்டு ஆலோசனை வழங்கி வருகின்றார்.