• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது புகார்..,

ByKalamegam Viswanathan

Aug 19, 2025

சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணங்களுக் காண மின் கணக்கீட்டை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் மின்வாரியம் அனுப்புவது வழக்கம்.

ஆனால் கடந்த சில மாதங்களாக ஒரு சில மின் இணைப்புக்கு மின் கட்டணம் கட்ட வேண்டிய கடைசி நாள் எது என்ற குருந்தகவல் அனுப்பாமல் திடீரென மின்கட்டணம் கட்ட வேண்டிய கடைசி நாள் முடிந்து விட்டதாக கூறி மின்வாரிய பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மின்சாரத்தை துண்டிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்

இது குறித்து முள்ளி பள்ளம் ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் முள்ளை சக்தி என்பவர் கூறுகையில் இதுபோல் பல மாதங்களாக நடந்து வருகிறது என்னுடைய வீட்டிற்கும் கட்ட வேண்டிய மின்கட்டணம் குறித்த எந்த ஒரு குறுந்தகவல் எனது மொபைல் நம்பருக்கு வராததால் மின்கட்டணம் கட்ட வேண்டிய கடைசி நாள் எதுவென்று தெரியாத நிலையில் எப்போதும் போல் தொழில் நிமித்தமாக மதுரை சென்று விட்டேன்.

திடீரென எனது மனைவி போன் செய்து மின்சார கட்டணம் கட்டவில்லை என கூறி வீட்டின் மின்சாரத்தை அதிகாரிகள் துண்டித்து சென்று விட்டதாக தகவல் கூறினார் உடனடியாக மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது மின்சார அலுவலகத்தில் யாரும் போனை எடுக்கவில்லை ஆகையால் இது குறித்து போன் மூலம் சென்னை தலைமை அலுவலகத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்ததற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். மேலும் இதுகுறித்து சோழவந்தான் மின்வாரிய அலுவலகத்திற்கும் தெரிவித்து உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கடந்த ஆறு மாதங்களில் இது போல் மூன்று முறை சென்னை அலுவலகத்திற்கு போன் செய்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகையால் எனது புகார் மீது உரிய விசாரணை செய்து இனிவரும் காலங்களில் மின்கட்டணம் கட்டக்கூடிய அனைவருக்கும் தவறாமல் குறுந்தகவல் மூலம் மின்கட்டணம் கட்ட வேண்டிய கடைசி தேதி குறித்த விபரத்தை தெரிவிக்க வேண்டும் அல்லது மின் அட்டையை மீட்டர்கள் மீது கண்டிப்பாக வைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என கூறினார்.

மேலும் திடீரென மின்கட்டணம் கட்டவில்லை எனக் கூறி மின்சாரத்தை துண்டித்து செல்வதால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். வணிக நிறுவனங்களில் இருப்பவர்களும் இதனால் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர். மின்சார வாரியத்தில் நடைபெறும் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தற்போது திடீர் திடீரென வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி மின்சாரத்தை துண்டிக்கும் அதிகாரிகளின் செயல் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

மின் கட்டணம் கட்ட வேண்டிய கடைசி நாள் எதுவென்ற குறுந்தகவல் கடந்த சில மாதங்களாக தனது மொபைல் எண்ணுக்கு வரவில்லை என கடந்த ஆறு மாதங்களில் மூன்று முறை சென்னை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தற்போது கூறி இருக்கிறார்.

இதுகுறித்து சோழவந்தான் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.