மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2024 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சேர்ந்த முத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் இவரது மகன் குரு பிரசாத் வயது 16 இவர் பசுமலையில் பள்ளியின் ஆஸ்டலில் ஒன்பதாம் வகுப்பு தங்கி படித்து வந்தார்.

தற்போது பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 3ந் தேதி குரு பிரசாத்துக்கு காய்ச்சல் இருப்பதாக பள்ளி நிர்வாகம் ராஜ்குமாரிடம் தொலைபேசியில் தெரிவித்தனர்.
இந்நிலையில் உங்கள் மகனை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் குரு பிரசாத்தை அவசர அவசரமாக ஊருக்கு அனுப்பி வைத்தது
அவர் 3ந் தேதி வீட்டுக்கு மதியம் ஒரு மணிக்கு சென்றுள்ளார். ஏன் திடீரென வந்தாய் ஏன் சோர்வாக உள்ளாய் என பெற்றோர்கள் கேட்டுள்ளார். அப்போது தனக்கு இடது தோள் வலி இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் அங்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தோள்பட்டை எலும்பு முறிவு உள்ளதாக கூறி கட்டு போட்டு உள்ளனர்.
மீண்டும் மகன் சோர்வாக இருப்பதை அறிந்த பெற்றோர் கடந்த 7 ந் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை பார்த்து வந்தனர். அங்கும் அவருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து முழு உடல் பரிசோதனை செய்த போது உடலில் உள்ள நுரையீரல் கல்லீரல் போன்ற பல்வேறு உறுப்புகள் காயமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை இருந்த குரு பிரசாத் திடீர் என இறந்து விட்டார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் கபடி விளையாடிய போது ஏற்பட்ட விபத்தில் குரு பிரசாத் இறந்துவிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குரு பிரசாத் பெற்றோர்கள் தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளது என பெற்றோர்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்
அதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன் விசாரணை செய்துள்ளார் அதற்கு பள்ளி நிர்வாகம் சரியான முறையில் பதில் அளிக்காத காரணத்தால், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து முறையிட சென்றனர் அங்கு அவரை சந்திக்க முடியவில்லை.

அதன் காரணமாக குருபிரசாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த ஆய்வாளர் மதுரை வீரன் மற்றும் போலீசார்
குரு பிரசாத் பெற்றோர் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது தங்கள் மகன் இறப்பில் சந்தேகம் உள்ளது எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அதுவரை போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர் அதற்கு ஆய்வாளர் மதுரை வீரன் மேற்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.