கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள கரிச்சி பட்டி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குலதெய்வ கோவிலில் கிடா வெட்ட அனுமதி வேண்டி திருவிழாவை தடுக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கினார்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் படி இரண்டு நாட்கள் திருவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். இதில் கர்ப்பிணி ஆடுகளை வெட்டக்கூடாது என்று நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ள நிலையில், ஆனால் தற்போது கிடா வெட்டக்கூடாது என்று காவல்துறை கூறுகின்றனர். நீதிமன்ற உத்தரவில் கிடா வெட்டக்கூடாது என்று உத்தரவு குறிப்பிடப்படவில்லை ஆனாலும் அனுமதிக்க மறுக்கின்றனர்.
இதில் குறிப்பிட்ட நபர்கள் திருவிழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் காவல் துறையினர் அனுமதிக்க மறுக்கின்றனர் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.








