• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார்..,

BySeenu

Aug 18, 2025

சென்னை மயிலாப்பூரில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற கம்பன் கழக பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து ராமர்(கடவுள்) பற்றி பேசும்பொழுது “சீதையை பிரிந்த ராமன் மதி மயங்கி புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான், வாலியை கொன்றதால் ராமன் பெரும் குற்றவாளி, குற்றவாளியை ராமாயணம் எழுதிய வால்மீகி உயர்த்தி பிடித்துள்ளார், கிருபானந்த வாரியாரும் ராமனை உயர்ந்தவர் என்று பல மேடைகளில் பேசியுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வைரமுத்து பேசியது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

ஸ்ரீ நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் தலைமையில் ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டம் தலைவர் மாணிக்கவாசகம் உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் புகார் அளித்தனர்.

யாராக இருந்தாலும் இன்னொருவர் மனம் புண்படும்படி பேசக்கூடாது எனவும் நல்ல விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் எனவும் தெரிவித்தனர்.