தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி கிராமத்தில் வரும் 21ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மதுரை பாரபத்தி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட நிலப்பரப்புகளின் தவெக இரண்டாவது மாநில மாநாடு நடத்த திட்டம் இடத்திற்கு அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று விடுமுறை நாட்கள் என்பதால் மாநாடு நடைபெறும் இடத்தில் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர்.
மாநாடு நடைபெறும் இடத்தில் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்து விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மாநாடு நடைபெறுவதற்கு முன்பு மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.