• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மாவட்ட அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி..,

ByKalamegam Viswanathan

Aug 17, 2025

மதுரை மாவட்டம் மேலூரில் பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றி பயணம் சார்பாக சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்வில் இளைஞர்களின் வெற்றி பயணம் நிறுவனர் பாவலர் சி.சூர்யா நோக்கவுரையாற்றி வரவேற்றார். போட்டியில் பிரிவு-1ல் முதல் பரிசு மாணவி த.யாழினி இரண்டாம் பரிசு மாணவர் க.சத்யவன் மூன்றாம் பரிசு மாணவி சுபிஷாஸ்ரீ பெற்றார்கள். பிரிவு-2ல் முதல் பரிசு மாணவி பெ.துர்கா இரண்டாம் பரிசு மாணவி சரவண பவதாரணி மூன்றாம் பரிசு மாணவர் ரா.பெரியசவுளி பெற்றார்கள்.

இவர்களுக்கு கேடயம்,புத்தகங்கள்,சான்றிதழ்கள்,பதக்கங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு பரிசை மாணவி தமிழ் யாழினி, தமிழ் நிலா,சண்முக ஹரி ஆகியோர் புத்தகங்கள்,100 ரூபாய்,சான்றிதழ்கள்,பதக்கங்கள் வழங்கப்பட்டது. பங்கேற்ற மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் புத்தகங்கள்,சான்றிதழ்கள்,பதக்கங்கள் வழங்கப்பட்டது.

தமிழாசிரியர் முனைவர் சேவுகமூர்த்தி,தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ராசு,தமிழர் மக்கள் இயக்கம் தலைமைக்குழு உறுப்பினர் அ.தங்கம் அடைக்கன்,நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மணிக்குமார்,இயக்குநர் கல்லானை சுந்தரம் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் பெற்றோர்கள் பங்கேற்றார்கள்.
பாரதிதாசன் அகாடமி தாளாளர் சி.ஜீவா நன்றியுரை வழங்கினார்.