கேரளா மாநிலம், எர்ணாகுளம், காக்கநாட்டில் இருந்து சென்னைக்கு ஏழு பேர் கொண்ட குழு சென்று உள்ளனர்.
அங்கு நடந்த விளையாட்டு நிகழ்வில் பங்கேற்ற பிறகு மீண்டும் சென்னை திரும்பி உள்ளனர்.

அப்பொழுது கேரளா தமிழக எல்லையான வாளையாறு சோதனை சாவடி அருகே சுமார் காலை 6:00 மணி வந்த போது கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்து உள்ளார். அப்பொழுது வாளையார் சோதனைச் சாவடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த லாவண்யா, மலர் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதில் படுகாயம் அடைந்த இருவர் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையிலும் மேலும் இருவர் வாளையாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் இருந்த மூன்று வயது குழந்தையும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகாலை நடந்த இந்த விபத்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.