திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த 25 வயது உடைய செல்வம் பழைய பல்லாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார்.
வழக்கம் போல் பல்லாவரம் தனியார் பள்ளி அருகே செல்வம் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது தனியார் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவியின் பின்னால் சென்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்தப்பெண்ணை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார் அது மட்டும் இல்லாமல் பள்ளிக்கு நடந்து செல்லும் போது பின்னால் சென்று தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.
சம்பந்தமாக அந்த மாணவி பெற்றோர்களுடன் தன்னை பின் தொடர்ந்து ஒருவர் தொந்தரவு செய்வதாக புகார் அளித்துள்ளார்.
மாணவியின் பெற்றோர் பள்ளிக்குச் செல்லும் போது மாணவியை பத்திரமாக அழைத்துச் சென்று பள்ளியில் விட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் பல்லாவரம் பகுதியில் உள்ள மாணவியின் வீட்டுக்குச் சென்ற செல்வம் தான் உங்கள் மகளை காதல் செய்து வருவதாகவும் எனவே திருமணம் செய்து வைக்குமாறு அம்மாவிடம் தெரிவித்துள்ளார்.
இதில் அதிர்ச்சடைந்த அம்மா கூச்சலிட்டபோது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தபோது கையில் வைத்திருந்த சிறிய கத்தியை கொண்டு சிறுமின் கையில் வெட்டி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு செல்வம் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.
இதனால் ரத்தம் சொட்ட சொட்ட மாணவியின் வீட்டிற்குள் கீழே விழுந்து உள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்ற போது அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் செல்வம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் அவரை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் செல்வம் மீது போக்ஸோ வழக்கு உட்பட்ட ஐந்து வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.