இந்தியாவின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது புதுக்கோட்டை மாவட்டத்திலும் நாளை முதல் மாவட்ட நிர்வாக முதல் பல்வேறு அமைப்புகள் வரை அனைவரும் சுதந்திர தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக சார்பில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது

300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கையில் தேசியக்கொடி மற்றும் மூவர்ண பலூன்களை ஏந்தி ஊர்வலமாக திலகர் தொடரில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக காந்தி சிலையை வந்தடைந்து காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது
பேரணியை மாவட்ட தலைவர் என் .ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.