• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாக்கு வியாபாரிகள் சார்பாக சுதந்திர தின விழா..,

BySeenu

Aug 16, 2025

79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோயமுத்தூர் சாக்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக தேசிய கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நாட்டின் 79 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் சாக்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக 79 வது சுதந்திர தின விழா சங்கத்தின் பொதுக்குழு தலைவர் பி ஏ ஹனிபா தலைமையில் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் தலைவர் உபைதுர் ரஹ்மான் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். செயலாளர் மதியழகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவில், பொருளாளர் அபுதாஹீர்,கவுரவ ஆலோசகர்கள் சுலைமான், தங்கவேலு,அப்துல் ரஹீம், முன்னால் நிர்வாகிகள் யூசுப்,அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில்,சங்கத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள் சமுத்திரகனி,மைதீன் அப்துல் காதர்,ஹைதர் அலி,முகம்மது யூசுப் ,மற்றும் இஸ்மாயில், தர்மராஜ் ,அக்கீம், அப்துல் ஜப்பார், அபுதாஹீர் ,லத்தீப், ஜுபேரியா ,அப்துல் முத்தலிப், அமானுல்லா ,
சிராஜுதீன் முஸ்தபா, ஜோசப் பிரான்சிஸ்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சங்கத்தின் தலைவர் உபைதுர் ரஹ்மான் சுதந்திர தின விழா வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து கொள்வதாகவும்,சங்க உறுப்பினர்களுக்கு தொடர்ந்து திருமண உதவி,மருத்துவம் மற்றும் கல்வி உதவி என பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி வருவதாக தெரிவித்தார்.