மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள மாவிலிபட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் – காளீஸ்வரி தம்பதி.
காளீஸ்வரி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக பிரிந்து தனது மகள் ராஜேஸ்வரியுடன், தாய் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று 7 ஆம் வகுப்பு பயிலும் தனது மகள் பள்ளி செல்ல 20 ரூபாய் செலவுக்காக கேட்ட நிலையில் அநாவசிய செலவுகள் செய்ய கூடாது என 20 ரூபாய் தாய் தரமறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன விரக்தியடைந்த மகள் ராஜராஜேஸ்வரி வீட்டிற்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 ரூபாய்க்காக பள்ளி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.