கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய மக்கள் 79-வது சுதந்திர தினத்தை நாளை(ஆகஸ்ட்_15) கொண்டாட இருக்கும் நிலையில்,

உலகப்பந்தின் அத்தனை பகுதி மக்களும் சுற்றுலாவாக குமரிக்கு வருகிறனர். கன்னியாகுமரிக்கு நாள் ஒன்றுக்கு 10,000-ம் முதல் 12,000,ம் மக்கள் தினம் வருகின்றனர்.
நாளை இந்தியாவே விழாக்கோலம் பூண்டு இருக்கும் நிலையில். இந்தியாவில் மக்கள் அதிகமாக கூடும் இரயில் நிலையம், பேருந்து நிலையம் பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது போல்,

இந்தியாவில் உள்ள வரலாற்று சின்னமாக உள்ள இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பணி செய்யும் வரிசையில்,
கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை பாறை,கண்ணாடிப் பாலம், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவற்றின் பாதுகாப்பு பணியில் நேற்றிலிருந்து (ஆகஸ்ட்_13)ம் தேதியில் இருந்தே, துப்பாக்கி ஏந்திய காவலருடன்,சீர் உடை அணிந்த சட்ட ஒழுங்கு காவலருடன், சுற்றுலா காவலரும் இரவு பகல் இடைவெளி இன்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
