மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டும் உலகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெளியாவதை யொட்டியும் அவரது ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் வி. முத்து தலைமையில் நடைபெற்றது. திருவேடகம் கிரி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ராஜா, , மீனு ஆனந்த் முருகன் ,கருப்பட்டி கண்ணன் விரும்பி, திலீப் பண்ணை செல்வம், வாடிப்பட்டி குரு ரவிச்சந்திரன் மற்றும் சோழவந்தான் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவரது ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது








