சென்னை அடுத்த குரோம்பேட்டையில் வெற்றி திரையரங்கின் முன்பாக கூலி படம் பார்க்க வந்த ரசிகர்களின் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் அணிவகுத்தும் உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து உதவி ஆணையர் ராஜன் திரையரங்கு உரிமையாளரை அழைத்து நீங்கள் ஐந்து ஷோ போடும் முறை நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது, டிராபிக் ஜாம் கிளியர் பண்ண முடியாது, ஒழுங்காக தியேட்டருக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் தியேட்டரின் பார்க்கிங் பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள் என ஆக்ரோஷமாக பேசினார். அப்போது உதவி ஆணையர் ராஜன் தியேட்டரின் உரிமையாளரிடம் உங்கள் மொபைல் நம்பரை கொடுங்கள் என கேட்டபோது, தியேட்டரின் உரிமையாளர் சற்றும் தயங்காமல் உள்ளே வாருங்கள் பேசலாம் என அழைத்துச் சென்றார்.
சாமானிய மக்கள் தள்ளுவண்டி அமைக்கும் போது கடும் நடவடிக்கை எடுக்கும் போக்குவரத்து காவலர்கள் பெரும் முதலாளிகளின் வார்த்தைக்கு அடிபணிந்து செயல்படுவதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.