• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கொரோனா வைரஸ் பட்டா லைட் எரியும் மாஸ்க். . . இது புதுசா இருக்கே …

கொரோனா வைரஸ் பட்டால் ஒளிரும் வகையிலான முகக்கவசத்தினை ஜப்பான் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா பரவல் உலக முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த கொரோனா வைரஸில் இருந்து தடுப்பதற்கு முகக்கவசம் உதவியாக இருக்கும் என்று நமது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக முகக்கவசம் மாறிவிட்டது.

இந்நிலையில் விதவிதமான முகக்கவசம் கண்டுபிடிக்கபட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் பட்டவுடன் ஒளிரும் வகையிலான முகக்கவசத்தை ஜப்பானின் Kyoto Prefectural பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.இதன் மூலம் நோய் தொற்றுகளை உடனடியாக கண்டறிந்து தடுக்க முடியும் என்று கூறுகின்றனர். மேலும் இந்த முகக்கவசத்தை நெருப்புக்கோழி முட்டையிலிருந்து எடுக்கப்படும் ஆண்டிபாடி மற்றும் ஒளிரும் சாயத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.