மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள பொன் மகாமுனிஸ்வரர் கோவிலில் 22 வது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது கறிவிருந்தில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

மதுரை சர்வதேச விமான நிலைய வளாகம் பகுதியில் அருள்மிகு பொன் மகாமுனிஸ்வரர் திருக்கோவில் உள்ளது திருக்கோவிலில் 22 ஆவது ஆண்டு ஆடி மாத பொங்கல் விழா நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதனை ஒட்டி பொன் மகா முனீஸ்வரர் திருக்கோவிலில் இன்று காலை 20 க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கறிவிருந்து அளிக்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை விமான நிலைய பொன் மகா முனிஸ்வரர் திருக்கோயில் நிர்வாகி ஏர்போர்ட் மூர்த்தி செய்திருந்தார்.