புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட A.மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவ மாணவியரும், வடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒரு மாணவியும் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் கொண்டு வந்த 7.5% உள் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்து இன்று அவர்கள் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதன்படி A.மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற மாணவன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், அபிராமி என்ற மாணவி சென்னை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ராமலிங்கம் என்ற மாணவர் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அதேபோல் வடவாளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த துர்கா தேவி என்ற மாணவி திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 7.5% அரசு உள் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பை பயில வாய்ப்பு கிடைத்துள்ளது

இன்று முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரை சந்தித்த மாணவ மாணவியரின் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கியும் வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்கள்.