மதுரையில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சியின் மதுரை எழுச்சி பேரணி மற்றும் மாநாட்டின் தீர்மானங்களை விளக்கும் வகையில் தெருமுனை கூட்டங்கள் 1000 இடங்களில் நடத்து வேண்டும் என அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் ஆணைகிணங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்டச் தலைவர் எஸ்.கே ஜாஹிர் உசேன் அவர்களின் ஆலோசனையின்படி செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் குரோம்பேட்டை பகுதியில் பல்லாவரம் தெற்கு பகுதி தலைவர் அப்துல் அஜீஸ் தலைமையில், பகுதி பொருளாளர் செய்யது முகமது தொகுப்புரையில், பகுதி செயலாளர் தமீம் அன்சாரி வரவேற்புரையில் நடைபெற்றது,

இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சலீம் கான் மற்றும் எஸ் எம் ஐ மாநில பொருளாளர் ஆவடி அஜிஸ் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானம் விளக்க உரையாற்றினர். மேலும் இதில் குரோம்பேட்டை பகுதி 27 வது வார்டுக்குட்பட்ட சாஸ்திரி காலனி, சேம்பர்ஸ் காலனி மற்றும் கோதண்டன் நகர் உட்பட பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு வீட்டுப் பட்டா வழங்குமாறும் ,மற்றும் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் பெண்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுபான கடையை உடனடியாக அகற்றி தருமாறு, குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நீண்ட காலமாக வாகனம் திரும்பி செல்வதற்கு பயன்பாட்டில் இருந்த சரவணா ஸ்டோர் போக்குவரத்து சிக்னலை மீண்டும் வாகனம் ஓட்டிகள் பொதுமக்கள் செல்வதற்கு திறந்து விடுமாறும் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினர்,

நடைபெற்ற தெருமுனை கூட்டம் கிளை நிர்வாகிகள் ரஜபூதின், அப்துல் ரகுமான், சுல்தான், முகமது ரஃபிக் , சையது நவாபுதீன், ஷேக் முகமது அலி, முஹம்மது அசன், முகமது ரஃபிக் , ரிஸ்கான், சையது முகமது, வஜிர்தீன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் குரோம்பேட்டை பகுதி ஜமாத் தார்கள் உட்பட ஆண்கள்,பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சி இறுதியில் தமுமுக பகுதி செயலாளர் சாதிக் ரவூப் நன்றி உரையாற்றினார்..