தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு அருங்காட்சியகம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் சமூகநீதி மற்றும் சமத்துவ மையம், சென்னை சமூகப் பணி கல்லூரி மற்றும் எம் வி முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து உலக பழங்குடியினர் தின விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உடல் நலக்குறைவு காரணமாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
பின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
“திண்டுக்கல்லில் பல்வேறு பழங்குடியின மக்கள் உள்ளனர்.
பழங்குடி இன மக்களின் வாழ்வியல் முறைகளை நாம் அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
கொடைக்கானலில் உண்டு உறைவிட 3 பள்ளிகள் எந்த அடிப்படை வசதி இல்லாமல் ஸ்மார்ட் டிவி, Wifi உடன் உள்ளது மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. உண்டு உறைவிடம் அமைத்தால் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்த கேள்விக்கு

கண்டிப்பாக இதனை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, என்ன தேவைகள் உள்ளது என்பதை பார்த்துவிட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆதிதிராவிட அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாத சூழ்நிலை உள்ளது என்பது குறித்த கேள்விக்கு,
தற்போது இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறைபாடுகள் இருந்தால் கூறுங்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். வடகாடு பகுதியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டட பணிகள் முறையாக நடைபெறாமல் உள்ளது குறிக்க கேள்விக்கு,
ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அங்கு உள்ள சாலைகள் 2.81 கோடி செலவில் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். நமது திமுக ஆட்சியில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆதிதிராவிட மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலைக்கு ஏற்ப என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்த்து செய்து முடிக்கப்படும்.
கவின் ஆணவ படுகொலை சம்பந்தமாக ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு
ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20% குறைந்துள்ளது குறித்த கேள்விக்கு

ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் நல்ல முறையில் உள்ளது. அதனை செம்மைப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
பழங்குடியின மக்களுக்கான சாதி சான்றிதழ் முறையாக வழங்கப்படாமல் உள்ளது குறித்த கேள்விக்கு
பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் பணியானது நடைபெற்று வருகிறது. எங்கு தேவைகள் உள்ளதோ அங்கு பணிகளை செய்து வருகிறோம். வகையறா சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உரிய நபர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வருகிறோம். சில குறுக்கு விசாரணை செய்யப்பட வேண்டி உள்ளதால் அது மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.