மதுரை மாவட்டம் திருமங்கலம் பொன்னமங்கலம் சேர்ந்த கருப்பையா மகள் பாண்டிச்செல்வி வயது 23 தனியார் கல்லூரியில் படித்து முடித்து வீட்டுக்கு வரும் போது

திருமங்கலம் விருதுநகர் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டர்மூன்று மணி அளவில் மூச்சு என்கின்ற தனியார் உணவு விடுதியில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டு திடீரென மூச்சுத் திறனாளிகள் ஏற்படவே உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் எனினும் போகும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிய வருகிறது. சிக்கன் ரைஸ் சாப்பிட்டதாலே உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரம் தெரிய வரும் என காவல்துறையில் தெரிவித்தனர் எனினும் சம்பவம் குறித்து,

உறவினர்கள் வேதனை இது குறித்து தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இளம் பெண் ஒருவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதால் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே திருமங்கலம் உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் மோஜோ உணவகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இது குறித்து கேட்ட பொழுது சோதனை செய்த பிறகு முழு விவரம் தெரிய வரும் எனவும் மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதனாலதான் உயிரிழந்தாரா என முழு விவரம் தெரிய வரும் என தெரிவித்தார்.
