தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தெற்கு திசை பார்த்து அமைக்கப்பட்டிருக்கும் மேடை 200 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்டது. மாநாடு அன்று 200 பேர் மேடையில் அமர்வார்கள் எனவும் தவெக தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்கு 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
மாநாடு மாலை 3 15 முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். மாநாட்டில் முதலில் கொடியேற்றுதல் பின்னர் தமிழ் தாய் வாழ்த்து, உறுதிமொழி கொள்கை பாடல், தீர்மானம், அதன் பின் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

மாநாட்டில் ஆண்கள் 1,20,000 ஆயிரம் பேரும் பெண்கள் 25 ஆயிரம் முதியவர்கள் 4500 மாற்றுத்திறனாளிகள் 500 பேரும் கலந்து கொள்வார்கள் எனவும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் இருந்து தொண்டர்கள் வருவார்கள் என்ற நிலையில் மாவட்டத்திற்கு ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என தலா 3600 பேர் வேண்கள், பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்களில் வர இருப்பதாகவும். மொத்தம் 1.50 லட்சம் நாற்காலிகள் மாற்றுத்திறனாளிகளுக்கென வீல் சேர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும். 100க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் 400 தற்காலிக கழிப்பறைகள், 50க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் தேவைக்கேற்ப சிசிடிவி கேமராக்கள் மேலும் மாநாட்டில் 420 ஒலிபெருக்கிகள் 20,000 மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.
மாநாட்டில் கலந்து கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு பாஸ் எதுவும் வழங்கப்படவில்லை மாநாட்டில் இருந்து உள்ளேயும் வெளியேவும் செல்வதற்காக 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதி சுகாதாரத் துறையிடம் மனு அளிக்கப்பட்டிருப்பதாகவும் தனியார் மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு மாநாட்டுக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
12 அவசர கால வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்காக தனியார் பாதுகாவலர்கள் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும். மாநாட்டில் கலைநிகழ்ச்சியாக பத்மஸ்ரீ வேலு ஆசன் கிராமிய கலைக்குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.