• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

அன்னதானகூடம் அமைக்க எம்எல்ஏ பூமி பூஜை..,

ByP.Thangapandi

Aug 8, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவுண்டன்பட்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வீரபத்ரசுவாமி கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அன்னதான கூடம் அமைக்க ரூ.6லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பங்கேற்று பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார். அதனைதொடர்ந்து தொட்டப்பநாயக்கனூரில் ரூ. 10லட்சம் நதி ஒதுக்கப்பட்டு அன்னதானகூடம் அமைக்க எம்எல்ஏ அய்யப்பன் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் உசிலம்பட்டி ஓபிஎஸ் அணி நகர செயலாளர் சசிக்குமார், மாவட்ட நிர்வாகி பிரபு, நகர துணைசெயலாளர் அழகுமாரி, ஒன்றியசெயலாளர்கள் ஜான்சன், வேங்கைமார்பன்,பிரேம்குமார் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.